ஆயுத எழுத்து

ஆய்வறிஞர்களால்  மதிப்பீடு செய்யப்படும் பன்னாட்டு தமிழியல் ஆய்விதழ்

AYUDA EZHUTHU

A  Peer Reviewed International Journal of Tamil Studies

ISSN : 2278 – 7550

6. RESEARCH ETHICS

ஆய்வு நெறிமுறைகள்

 

ஆயுத எழுத்து ஆய்வு இதழுக்கு அனுப்பப்படும் அனைத்து ஆய்வு கட்டுரைகளும் உயர் தரத்திலானதாகவும், நம்பகத்தன்மை உடையதாகவும் மற்றும் அறநெறி சார்ந்ததாகவும் இருக்க வேண்டும்.

எனவே, ஆய்வாளர்கள் கீழ் குறிப்பிடும் வழிகாட்டுதல்களையும் இத்துடன் சிவப்பு வண்ணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய தலைப்புகள் பகுதிகளுக்கு சென்று அவற்றை கவனமாக உள்வாங்கிக் கொண்டு தங்களது ஆய்வு கட்டுரைகளை எழுதி அனுப்புவதை ஆயுத எழுத்து வரவேற்று விரும்புகிறது.

 

6.1. Ethical Guidelines for Authors

ஆய்வாளர்களுக்கான நெறிமுறை வழிகாட்டுதல்கள் :

ஆயுத எழுத்து இதழுக்கு கட்டுரை அனுப்பும் ஆய்வாளர்கள் கீழ்காணும் வழிமுறைகளையும் விதிமுறைகளையும் அவசியம் பின்பற்ற வேண்டும். அவ்வாறு இல்லாத கட்டுரைகள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளபடமாட்டாது.

கட்டுரை சமர்ப்பிப்பு :

ஆய்வாளர்கள் தங்கள் அசல் மற்றும் இதுவரை வெளியிடப்படாத ஆய்வு கட்டுரைகளை மின்னஞ்சல் வாயிலாக சமர்ப்பிக்க வேண்டும்.

கட்டுரைகள் தமிழ் உட்பட இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கலாம்.

சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகள் பின்வரும் வடிவமைப்பு மற்றும் உள்ளடக்க தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

பொருண்மை:

சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரையிலான இலக்கிய ஆய்வுகள், நாட்டுப்புறவியல், இலக்கணம், மொழியியல் ஆய்வுகள் மற்றும் தமிழோடு தொடர்புடைய கலை இலக்கிய வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வுகள் அனைத்தும் ஆய்வுப் பொருளாகலாம். இது குறித்த முழு விபரங்கள்  நமது இணையத் தளத்தில், HOME PAGE- 3. Journal Editorial Policy- பொருளடக்க கொள்கை – 3.2. Subject Areas-பொருண்மை  என்னும் பகுதியில் விரிவாகவும் விளக்கமாகவும் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப் பேராசிரியர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள், முனைவர் பட்ட ஆய்வு மாணாக்கர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் யாவரும் கட்டுரை அனுப்பலாம்.

ஆய்வுக்கட்டுரைகள் Ms Word இல், A4 அளவில் 1.5 வாக்கிய இடை வெளியில் (lining Space) அமைய வேண்டும்.

கட்டுரைகள் 5 பக்கங்களுக்கு குறையாமலும் 12 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

ஆய்வு கட்டுரைகள்  தமிழில்  யுனிகோடு எழுத்துருக்கள் ( Unicode Faces) ஏதேனும் ஒன்றில் அதாவது, லதா, நிர்மலா, ஏரியல்  யுனிகோடு போன்றவற்றிலும் ஆங்கிலத்தில் Times New Roman என்ற எழுத்துருவிலும்  அமைதல்  வேண்டும் .

கட்டுரைத்  தலைப்பு :

கட்டுரை தலைப்பு தெளிவாகவும், சுருக்கமாகவும், ஆய்வு உள்ளடக்கத்தை பிரதிபலிப்பதாகவும் இருக்க வேண்டும்.

ஆய்வாளர் பெயர் :

முகவரி :

நெறியாளர் பெயர் :

முகவரி :

ஆய்வுச் சுருக்கம் :

ஆய்வுச்சுருக்கம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 150 வார்த்தைகளுக்கு குறையாமலும் 300 வார்த்தைகளுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

குறித் சொற்கள் :

5 முதல் 10 குறித் சொற்கள் எனப்படும் முக்கிய வார்த்தைகள் ஆய்வு சுருக்கத்தின்  கீழ் இருக்க வேண்டும் .

அறிமுகம் / முன்னுரை :

ஆய்வு முறைதுணைத்  தலைப்புகள் :

முடிவுரை :

துணைநூல்பாட்டியல் :

குறிப்புதவி :                              

அடிக்குறிப்புகளுக்கு எண்களின் வரிசை கொடுத்து கட்டுரையின் முடிவில் பட்டியலிடப்பட வேண்டும். மேற்கோள்களுக்கான துணைநூற்பட்டியல் பொருத்தமானதாக இருத்தல் வேண்டும்.

அட்டவணை மற்றும் புள்ளிவிவரங்கள் : 

தேவைப்பட்டால் அட்டவணை மற்றும் புள்ளிவிவரங்கள் சேர்க்கலாம். அவை தெளிவாகவும், துல்லியமாகவும் இருக்க வேண்டும்.

படங்கள் :

தேவைப்பட்டால், தெளிவான மற்றும் பொருத்தமான படங்களை சேர்க்கலாம்.

இது பற்றிய விளக்கமான  தகவல்கள், நமது இணையத் தளத்தில் HOME PAGE 5. JOURNAL STANDARDS – ஆய்வு இதழ் தரநிலைகள் என்னும் விரிவாகவும் விளக்கமாகவும் கொடுக்கப்பட்டுள்ளது.

முக்கியக்குறிப்புகள் :

ஆய்வு கட்டுரையானது  ஏன் எழுதப்பட்டது, அதன் பின்னணி என்ன, என்ன நோக்கத்திற்காக ஆய்வு செய்யப்பட்டது என்பதைத் தெளிவாக விளக்கும்   வகையிலும் ஒரு குறிப்பிட்ட சிக்கலைத் தீர்க்க அல்லது ஒரு புதிய கோட்பாட்டை நிறுவ என்ன தூண்டுதலாக இருந்தது என்பதை குறிப்பிடும் கல்விசார் பங்களிப்பு (Academic Contribution) இருக்க வேண்டும்

கட்டுரை, ஏற்கனவே இருக்கும் அறிவியலின் புதிய கண்டுபிடிப்புகளைக் கொண்டிருக்கவும்  புதிய தகவல்களை வழங்குதல், முந்தைய ஆய்வுகளின் குறைபாடுகளைச் சரிசெய்தல் அல்லது புதிய ஆராய்ச்சி முறைகளை அறிமுகப்படுத்துதல் போன்ற ஏற்கனவே உள்ள அறிவின் முன்னேற்றம் (Advancement of existing knowledge):பங்களிப்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.

கட்டுரையின் முடிவுகள் அல்லது கண்டுபிடிப்புகள் கொள்கை உருவாக்கத்திற்கு எவ்வாறு பயன்படும் என்பதை விளக்கி, ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரச்சினைக்குத் தீர்வு காண அல்லது ஒரு புதிய திட்டத்தை உருவாக்க இந்த ஆய்வு எவ்வாறு உதவும் என்பதை தெளிவுபடுத்தும் கொள்கை உருவாக்கத்திற்கான பயன்பாட்டை  (Applicability for policy making) கொண்டிருக்க வேண்டும்.

இது குறித்த முழு விபரங்கள்  நமது இணையத் தளத்தில் HOME PAGE – 4. JOURNAL QUALITY CRITERIA-இதழ் தர நிர்ணய அளவுகோல் பகுதியில் விரிவாகவும் விளக்கமாகவும் கொடுக்கப்பட்டுள்ளது .

கட்டுரைகள் இலக்கண பிழையின்றி இருத்தல் வேண்டும்.

கட்டுரைகள் வேறு எந்த ஒரு ஆய்விதழில் ஏற்கனவே பதிப்பிக்கப்பட்டதாகவும் கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்டதாகவும்  இருத்தல் கூடாது.

பதிப்பிக்கப்படாத ஆய்வுக்கட்டுரையாயினும் வேறு இதழ்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டவற்றை அனுப்ப வேண்டாம். அவ்வாறே, இவ்விதழுக்கு அனுப்பிய கட்டுரையை எங்களுது ஆசிரியர் குழு முடிவு தெரிவிக்கும் வரை வேறு இதழ்களுக்கும் அனுப்ப வேண்டாம்.

அனைத்து குறிப்புகளும் ஒரு சீரான பாணியில் குறிப்பிடப்பட வேண்டும். இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகள் மட்டுமே “ஆயுத எழுத்து”இதழின் ஆசிரியர் குழுவால் பரிசீலனை செய்யப்படும்.

 

6.2. Plagiarism Prevention

அறிவார்ந்த சொத்துத் திருட்டு தடுப்பு :

“ஆயுத எழுத்து” இதழில் வெளியாகும் அனைத்து ஆய்வு கட்டுரைகளும் உயர் தரத்திலானதாகவும், நம்பகத்தன்மை உடையதாகவும், மற்றும் அறநெறி சார்ந்ததாகவும் இருக்க வேண்டும். எனவே, அறிவார்ந்த சொத்துத் திருட்டு தடுப்பு மிகவும் முக்கியம். எனவே , ஆய்வாளர்கள், ஆராய்ச்சி நெறிமுறைளை  கவனத்துடன் பின் பற்ற வேண்டும்.

ஆராய்ச்சி நெறிமுறைகள் :

ஆராய்ச்சி நெறிமுறைகள் என்பது ஆராய்ச்சியில் ஈடுபடும்போது பின்பற்ற வேண்டிய ஒழுக்கமான மற்றும் நேர்மையான நடைமுறைகளின் தொகுப்பாகும். இதில், மற்றவர்களின் கருத்துக்கள் மற்றும் படைப்புகளை மதித்தல், தவறான தரவுகளை வெளியிடாமல் இருப்பது, மற்றும் நேர்மையான முறையில் ஆராய்ச்சி முடிவுகளைப் பரப்புதல் போன்ற பல விஷயங்கள் அடங்கும்.

அறிவார்ந்த சொத்துத் திருட்டு தடுப்பு :

அறிவார்ந்த சொத்துத் திருட்டு என்பது மற்றவர்களின் படைப்புகள், கண்டுபிடிப்புகள் அல்லது கருத்துக்களை அவர்களின் அனுமதி இல்லாமல் பயன்படுத்துவது அல்லது தனது சொந்த படைப்பாக முன்வைப்பது. இது பதிப்புரிமை மீறல், காப்புரிமை மீறல் மற்றும் பிற வகையான அறிவுசார் சொத்துரிமை மீறல்களை உள்ளடக்கும்.

ஒத்த மதிப்பெண் வரம்பு :

“ஒத்த மதிப்பெண் வரம்பை மீறக்கூடாது” என்பது, ஒருவரின் ஆராய்ச்சிக் கட்டுரை அல்லது படைப்பில், மற்றவர்களின் படைப்புகளிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகள் ஒரு குறிப்பிட்ட வரம்புக்கு மேல் இருக்கக்கூடாது என்பதைக் குறிக்கிறது. பொதுவாக, இந்த வரம்பு 15% முதல் 20% வரை இருக்கும். அதாவது, ஒருவரின் படைப்பில், அதிகபட்சம் 20% மட்டுமே மற்றவர்களின் படைப்புகளிலிருந்து எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். மீதமுள்ள 80% அவரது சொந்த சிந்தனை மற்றும் உழைப்பாக இருக்க வேண்டும்.

“ஆயுத எழுத்து” இதழில் கட்டுப்பாடு :

“ஆயுத எழுத்து” இதழில், எந்த ஒரு கட்டுரைக்கும் மேற்கண்ட வரம்பிற்குள் மட்டுமே பிற ஆய்வாளர்களின் கருத்துக்களை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும். மீறும் பட்சத்தில், அவர்கள் கட்டுரை நிராகரிக்கப்படும், மேலும் அவர்கள் மீது பதிப்புரிமை மீறல் சட்டங்களின் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆய்வாளர்கள், பிற ஆய்வாளர்களின் கருத்துக்களை பயன்படுத்தினாலும், அவர்கள் பெயரை தெளிவாக குறிப்பிட்டு, மேற்கோள் காட்ட வேண்டும்.

 

6.3. Conflict of Interest Disclosure

நலன் சார்ந்த முரண்பாடுகள் வெளிப்பாடு :

“ஆயுத எழுத்து”  இதழுக்கு அனுப்பப்படும் அனைத்து ஆய்வு கட்டுரைகளும் உயர் தரத்திலானதாகவும், நம்பகத்தன்மை உடையதாகவும், மற்றும் அறநெறி சார்ந்ததாகவும் இருக்க வேண்டும். எனவே, நலன் சார்ந்த முரண்பாடுகள் வெளிப்படுத்துவது மிகவும் முக்கியம்.

நலன் சார்ந்த முரண்பாடுகள் வெளிப்பாடு :

நலன் சார்ந்த முரண்பாடுகள் என்பது ஒரு தனிநபருக்கு அல்லது நிறுவனத்திற்கு ஒரு குறிப்பிட்ட ஆராய்ச்சியில் தனிப்பட்ட அல்லது நிதி ரீதியான அக்கறை இருக்கும்போது, அது அவர்களின் ஆராய்ச்சி முடிவுகளை பாதிக்கக்கூடும்.

“ஆயுத எழுத்து” இதழில் நலன் சார்ந்த முரண்பாடுகள் :

“ஆயுத எழுத்து” இதழில், தலைமை, ஆசிரியர் குழு உறுப்பினர்கள், பரிசீலனையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் இடையே எந்த முரண்பாடுகளும் இல்லை என்பதால சாத்தியமான முரண்பாடுகள் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

ஆராய்ச்சிக் கட்டுரையின் ஆசிரியர், அதை மதிப்பாய்வு செய்யும் மதிப்பீட்டாளர் மற்றும் வெளியீட்டு நிறுவனத்தின் ஆசிரியர் குழு உறுப்பினர். ஆகியோர் யாருக்கும் அந்த ஆராய்ச்சியில் தனிப்பட்ட அல்லது நிதி ரீதியான அக்கறை இருக்கவில்லை அப்படி ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், அவை வெளிப்படையாக அறிவிக்கப்படும்.

இந்த வெளிப்பாடு ஏன் முக்கியம்?

நம்பகத்தன்மை :

நலன் சார்ந்த முரண்பாடுகள் வெளிப்படுத்தப்படும் போது, ஆராய்ச்சி முடிவுகளின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படுகிறது.

வெளிப்படைத்தன்மை :

வெளிப்படைத்தன்மை அதிகரிப்பதன் மூலம், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கிறது.

நீதி:

நலன் சார்ந்த முரண்பாடுகளை வெளிப்படுத்துவது, ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டு செயல்முறைகளில் நீதியை நிலைநாட்ட உதவுகிறது.

எனவே, ஆராய்ச்சி நெறிமுறைகளைப் பின்பற்றுவது மற்றும் நலன் சார்ந்த முரண்பாடுகளை வெளிப்படுத்துவது “ஆயுத எழுத்து” ஆய்விதழில் மிகவும் முக்கியம். இது “ஆயுத எழுத்து” இதழின் தரத்தை உயர்த்துவதோடு இது, தமிழ் ஆய்வுகளின் நம்பகத்தன்மையை சர்வதேச அளவில் உயர்த்த உதவுகிறது.

 

6.4. AI Generated content policy

செயற்கை நுண்ணறிவு (AI) உருவாக்கப்பட்ட உள்ளடக்கக் கொள்கை :

ஆயுத எழுத்து பன்னாட்டு தமிழியல் ஆய்வு இதழ், செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தின் பயன்பாடு குறித்து ஒரு கொள்கையை நிறுவுவதன் மூலம், வெளியீட்டு நெறிமுறைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதில் உறுதி பூண்டுள்ளது.

இக்கொள்கை, AI கருவிகளால் உருவாக்கப்பட்ட ஆய்வு கட்டுரைகளை எழுதும் ஆய்வாளர்கள் மற்றும் மதிப்பாய்வாளர்களுக்கு வழிகாட்டுதலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

AI உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தின் வரையறை :

இக்கொள்கையின் நோக்கத்திற்காக, AI யினால் உருவாக்கப்பட்ட ஆய்வு கட்டுரை என்பது, மனிதனால் வெளிப்படையாக உருவாக்கப்பட்ட உள்ளீடுகள் அல்லது அறிவுறுத்தல்கள் இல்லாமல், AI அல்காரிதம்கள் அல்லது இயந்திர கற்றல் மாதிரிகளால் உருவாக்கப்பட்ட எந்தவொரு உரை, தரவு அல்லது பிற படைப்பு உள்ளடக்கத்தையும் குறிக்கிறது.

AI உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தின் பயன்பாடு :

ஆயுத எழுத்து இதழ், பின்வரும் வழிகளில் AI யினால் உருவாக்கப்பட்ட ஆய்வு கட்டுரைகளை பயன்படுத்துவதை அனுமதிக்கிறது.

ஆராய்ச்சி உதவியாளர் :

AI கருவிகள், இலக்கியத் திறனாய்வு, தரவு பகுப்பாய்வு மற்றும் மொழிபெயர்ப்பு போன்ற பணிகளுக்கு உதவிகரமாகப் பயன்படுத்தப்படலாம்.

உள்ளடக்க உருவாக்கம் :

AI கருவிகள், கட்டுரையின் கட்டமைப்பை உருவாக்க, தலைப்புகளை பரிந்துரைக்க அல்லது சுருக்கங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படலாம்.

AI உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தின் வரம்புகள் :

ஆயுத எழுத்து இதழ், பின்வரும் வழிகளில் AI யினால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதை அனுமதிக்காது.

முழுமையான உள்ளடக்க உருவாக்கம் :

AI கருவிகள், மனித ஆய்வாளரின் பங்களிப்பு இல்லாமல், முழுமையான கட்டுரைகளை உருவாக்கப் பயன்படுத்தக்கூடாது.

கருத்து களவாடல் :

AI உருவாக்கப்பட்ட உள்ளடக்கம், ஏற்கனவே வெளியிடப்பட்ட படைப்புகளிலிருந்து பெறப்பட்டதாகவோ அல்லது அவற்றின் சாயலாகவோ இருக்கக்கூடாது.

ஆய்வாளரின் பொறுப்புகள் :

AI கருவிகளைப் பயன்படுத்தி உள்ளடக்கத்தை உருவாக்கும் ஆய்வாளர்கள், பின்வரும் பொறுப்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.

வெளிப்பாடு :

தங்கள் கட்டுரையில் AI கருவிகளின் பயன்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.

ஆய்வாளர் பொறுப்பு :

AI கருவிகளை ஒருபோதும், ஆய்வாளர்களாகக் கருதப்படக்கூடாது. கட்டுரையின் உள்ளடக்கம் மற்றும் முடிவுகளுக்கு கட்டுரை ஆசிரியரே முழுப் பொறுப்பு.

சரிபார்ப்பு :

AI உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும்.

மதிப்பாய்வாளர்களின் பொறுப்புகள் :

AI கருவிகளைப் பயன்படுத்தி மதிப்பாய்வு செய்யும் மதிப்பாய்வாளர்கள், பின்வரும் பொறுப்புகளை கொண்டிருப்பர்.

வெளிப்பாடு :

தங்கள் மதிப்பாய்வில் AI கருவிகளின் பயன்பாட்டை வெளிப்படுத்துவர்.

சார்பின்மை :

AI யினால் உருவாக்கப்பட்ட ஆய்வு கட்டுரைகளை மதிப்பாய்வு செய்யும் போது, சார்பின்றியும் நடுநிலையாகவும் இருப்பர் .

கொள்கை மீறல்கள் :

இக்கொள்கையை மீறும் ஆய்வாளர்கள் அல்லது மதிப்பாய்வாளர்களுக்கு எதிராக, “ஆயுத எழுத்து” இதழ் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க நேரிடும்,

     1. கட்டுரையை நிராகரித்தல்.

     2. வெளியீட்டுத் தடையை விதித்தல்.

Translate »